
சண்டை காட்சியில் விஷால் காயம் : சிகிச்சைக்கு கேரளா செல்கிறார்
படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சி ஐதராபாத்தில் உள்ள ஒரு கட்டுமானம் நடந்து கொண்டிருக்கும் ஒரு கட்டடத்தில் நடந்தது. சண்டை இயக்குனர் பீட்டர் ஹெய்ன் சண்டை காட்சியை இயக்கினார். வில்லன்கள் துரத்தி வரும்போது விஷால் ஒரு கை குழந்தையுடன் கட்டடத்தில் இருந்து குதிப்பது மாதிரியான காட்சி படமாக்கப்பட்டது. அப்படி குதிக்கும்போது டைமிங் கோளாறு காரணமாக சுவரில் மோதி கையில் காயம் அடைந்தார். முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொண்டு தொடர்ந்து நடித்தார்.
ஒரு கட்டத்தில் அவரால் நடிக்க முடியாமல் போகவே படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் விஷாலுக்கு ரத்த காயத்தை விட உள்காயம் பெரிதாக ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஒரு மாதத்திற்கு படப்பிடிப்பை தள்ளி வைப்பதாக தயாரிப்பாளர்களும், விஷாலின் நண்பர்களுமான ரமாணாவும், நந்தாவும் அறிவித்திருக்கிறார்கள். விஷால் சிகிச்சைக்காக கேரளா செல்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் குணமாகி வந்ததும் அடுத்த மாதம் படப்பிடிப்பை தொடர உள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!