
இந்திய சூப்பர் ஹீரோ சக்திமான் சினிமாவாகிறது
இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி குழந்தைகளை கட்டிப்போட்ட பேவரைட்டான ஷோ என்றால் அது சக்திமான் தான். இவர் தான் நமது இந்தியன் சூப்பர் ஹீரோ. தீபாவளி நாட்களில் சக்தி மான் டிரெஸ்ஸை வாங்கி போட்டுக்கொண்டு ஒரு கையை மேலே தூக்கி சுத்தி சுத்தி விளையாடியதை புன் சிரிப்புடன் நினைத்து பார்த்த அன்றைய கிட்ஸ்களுக்கு தற்போது இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது.
15 ஆண்டுகளுக்கு மேலாகியும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த சக்திமான் தற்போது மீண்டும் திரைப்படமாக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்படவுள்ளது. சோனி பிக்சர்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த திரைப்படம் மூன்று பாகங்களாக வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அசத்தலான டீசரை வெளியிட்டுள்ள தயாரிப்பு நிறுவனம், "மனிதகுலத்தின் மீது இருளும் தீமையும் நிரம்பியுள்ளதால், அவர் திரும்புவதற்கான நேரம் இது" என டீசரில் குறிப்பிட்டுள்ளது. தற்போது இணையத்தில் வைரலாகும் இந்த டீசரை 90ஸ் கிட்ஸ்கள் பார்த்துவிட்டு "இப்ப வரச்சொல்லுங்கடா மார்வெல் அவெஞ்சர்ஸ" என சவால் விட்டு கொண்டாடி வருகின்றனர்


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!