
டைட்டானிக் போஸ்டரை உல்டா பண்ணிய விக்னேஷ் சிவன்
இந்த படம் மார்ச் மாதம் வெளிவருகிறது. இது ஒரு முக்கோண காதல் கதை. அதனை தன் பாணியில் காமெடி ரொமான்ஸ் கலந்து இயக்கி வருகிறார் விக்னேஷ் சிவன். படம் தொடர்பான வித்தியாசமான போஸ்டர்களை வெளியிட்டு வருகிறார்.
நேற்று அவர் வெளியிட்ட போஸ்டர் டைட்டானிக் படத்தில் கப்பலின் முனை பகுதியில் நின்று கொண்டிருக்கும் ஜாக் - ரோஸ் போஸ்டரை அப்படியே உல்டா செய்து விஜய் சேதுபதி, நயன்தாராவுடனும், சமந்தாவுடன் இருப்பது போன்று வெளியிட்டிருக்கிறார்.
விக்னேஷ் சிவனின் இந்த போஸ்டர் வைரலாகி உள்ளது. சிலர் விக்னேஷ் சிவனின் ஐடியாவை பாராட்டினாலும், சிலர் புகழ்பெற்ற படத்தின் புகழ்பெற்ற டிசைனை அப்படியே காப்பி அடிக்கலாமா? என்றும் விமர்சித்து வருகிறார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!