
எப்ஐஆர் உருவாக்கத்தில் அஜித்தின் அட்வைஸ் உதவியது : மனு ஆனந்த்
கவுதம் மேனனுடன் பணியாற்றிய எட்டு வருடங்களில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்திலும் அஜித்துடன் இணைந்து பணியாற்றி அவருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு மனு ஆனந்த்திற்கு கிடைத்தது.. அந்த சமயத்தில் அஜித் அவ்வப்போது சொன்ன ஆலோசனைகளும் அறிவுரைகளும் இந்த எப்ஐஆர் பட உருவாக்கத்தின்போது ரொம்பவே பயன்பட்டது என கூறியுள்ளார் இயக்குனர் மனு ஆனந்த்..
அஜித் படத்தை இயக்கும் எண்ணம் இருக்கிறதா என்கிற கேள்விக்கு பதிலளித்துள்ள மனு ஆனந்த், இப்போதுவரை அப்படி ஒரு எண்ணம் இல்லை.. அவர் மீது நடிகராகவும் தனிப்பட முறையிலும் மிகப்பெரிய மதிப்பு வைத்துள்ளேன். ஒருவேளை அவரது படத்தை இயக்கம் வாய்ப்பு கிடைத்தால் அது நிச்சயமாக ஆசீர்வதிக்கப்பட்ட தருணமாக எனக்கு இருக்கும் என கூறியுள்ளார் மனு ஆனந்த்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!