
ரஜினி 169 அறிவிப்பு - நெல்சனுக்கு அடித்த அதிர்ஷ்டம்
கோலமாவு கோகிலா படம் மூலம் இயக்குனராக அறிமுகமான நெல்சன் அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கி வெற்றி பெற்றார். இப்போது விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி உள்ளார். ஏப்ரலில் பீஸ்ட் வெளியாக உள்ள நிலையில் அடுத்தப்படியாக ரஜினி பட வாய்ப்பை பெற்றுள்ளார். குறுகிய காலத்திலேயே ரஜினி பட வாய்ப்பை பெற்றுள்ள நெல்சனுக்கு அதிர்ஷ்டத்துடன் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!