
ஆஸ்கர் விருதுகளை அள்ளப்போகும் தி பவர் ஆப் தி டாக்
பெல்பாஸ்ட், கோடா, டோண்ட் லாக்அப், டிரைவ் மை கார், டியூன், கிங் ரிச்சர்ட், லிகோரியா பீட்சா, நைட்மேர் அலே, தி பவர் ஆப் டாக், வெஸ்ட் சைட் ஸ்டோரி ஆகிய படங்கள் இறுதி போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதில் தி பவர் ஆப் தி டாக் என்ற படம் சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், துணை நடிகர், துணை நடிகை, சிறந்த இசை, சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு. சிறந்த தயாரிப்பு நிர்வாகம், சிறந்த எடிட்டிங், சிறந்த ஒலிப்பதிவு உள்பட 12 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. இதில் குறைந்த பட்சம் 6 விருதுகளை படம் வெல்லும் என்கிறார்கள்.
இதனுடன் ஏற்கெனவே 2 முறை சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது பெற்ற ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் தனது வெஸ்ட் சைட் ஸ்டோரி படத்துக்காக சிறந்த இயக்குனர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு சிறந்த இயக்குனருக்காக விருது கிடைக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!