
‛ராக் வித் ராஜா - சென்னையில் இளையராஜா இசை நிகழ்ச்சி
பிப் 09, 2022
Advertisement
தலைமுறை கடந்து வாழும் இசையமைப்பாளர் இளையராஜா இசைக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் ஏராளம். ஏராளமான இசை கச்சேரிகள் நடத்தி உள்ளார். சென்னையை தொடர்ந்து சிங்கப்பூரில் நடக்க இருந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சி கொரோனாவால் தடைபட்டது. இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின் சென்னையில் மீண்டும் இளையராஜா இசை நிகழ்ச்சி நடக்க உள்ளது. மார்ச் மாதம் நடக்க உள்ள அந்த நிகழ்ச்சிக்கு, ராக் வித் ராஜா என தலைப்பு வைத்துள்ளனர். இதுகுறித்த விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளது.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!