
பார்த்திபன் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா
இதற்கிடையே தமிழில் தான் இயக்கி நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தை ஹிந்தியில் அபிஷேக் பச்சனை வைத்து ரீமேக் செய்திருக்கும் பார்த்திபன், இந்த படத்திற்கு இளையராஜா இசையமைப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த 1999ஆம் ஆண்டு பார்த்திபன் இயக்கி நடித்த ஹவுஸ் புல் படத்திற்கு பிறகு 23 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் பார்த்திபன் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். மேலும் அந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கும் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார் பார்த்திபன்.
அதன் உடன், ‛‛ஹிந்தியின் பின்னணி இசைக்கோர்ப்பில், மறுபுறம் ஏ.ஆர்.ஆர்-ரின் இரவின் நிழல். இசைபட வாழ்தல் அர்த்தப்பட. புகழ் பெற்று பொருள் ஈட்டாமல் இன்னும் பெற உழைப்பின் பெருமை காண்கிறேன். ஆஸ்கார் நாமினேஷன்ஸ் அறிவித்தபோது உச்சரிக்கப்பட்ட பெயர்களின் உச்சபட்ச உற்சாகம் ரூபாய், டாலர், பவுண்ட்டில் அடங்காது"" என்று பதிவிட்டிருக்கிறார் பார்த்திபன்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!