
நானே வருவேன் படத்தில் நடிக்க தொடங்கிய தனுஷ்
பிப் 09, 2022
Advertisement
திருச்சிற்றம்பலம், மாறன் படங்களைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் வாத்தி என்ற படத்தில் நடித்து வந்தார் தனுஷ். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். ஐதராபாத்தில் படப்பிடிப்பு தொடர்ந்து ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று முதல் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் இணைந்து இருக்கிறார் தனுஷ். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் பாடல் கம்போசிங் கடந்த வாரத்தில் முடிந்து விட்டதாக ஒரு தகவல் வெளியிட்டிருந்தார் செல்வராகவன். இந்த நிலையில் தற்போது நானே வருவேன் படத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!