
பலாத்கார வீடியோ வெளியானதாக தகவல் : சுப்ரீம் கோர்ட், பிரதமருக்கு நடிகை கடிதம்
பாலியல் பலாத்காரத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவை திலீப் பார்த்து ரசித்ததாக கூறப்பட்டது. அந்த வீடியோவை போலீசார் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். தற்போது இந்த வீடியோ வெளியாகி விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட நடிகை வீடியோ வெளியானது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வீடியோ பரவுவதை தடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தின் நகலை ஜனாதிபதி, பிரதமர், கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, கேரள முதல்வர் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!