
பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் கவலைக்கிடம்
மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த ‛பாலிவுட்" பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர்(92). கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். இவருக்கு கடந்த 8 ம் தேதி கோவிட் தொற்று உறுதியானது. தெற்கு மும்பையில் உள்ள ‛பிரீச் கேண்டி" மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ‛வென்டிலேட்டர்" மூலம் சுவாசித்து வருகிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக சில நாட்களுக்கு முன்னர் டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை : லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளது. அவர் கவலைக்கிடமாக உள்ளார். வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவர், டாக்டர்களின் கண்காணிப்பில் தொடர்ந்து இருப்பார்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!