
விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி
மனுவை சந்தித்த போது நான் நிறைய படம் பண்ணிட்டேன் ஆனால் இன்னும் புதிதாக ஒரு நடிகராக நல்ல படம் செய்ய வேண்டும் என தோன்றியது. ராட்சசன் படம் இந்திய அளவில் ஒரு நடிகராக ஒரு மரியாதை பெற்று தந்தது. இந்தக் கதை சொன்ன போதே எனக்கு பிடித்திருந்தது. எனக்கு சையத் முகமது என ஒரு நண்பர் இருந்தார், அவனுக்கு நடந்த சில விஷயங்களை சொல்லும் போது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் வளர்ந்த விதம் வேறு, ஆனால் இந்தக் கதை கேட்ட போது அதை உணர்ந்தேன், இது உண்மையில் நடக்கிறதே, இதை சொல்ல வேண்டும் என தோன்றியது. ஒரு கட்டத்தில் இந்த படம் தயாரிப்பாளர் தயாரிக்க முடியாத சூழ்நிலையில் என்னிடம் வந்து நீங்கள் காத்திருக்க வேண்டும் என உண்மையை சொன்னார் மனு, அவரது நேர்மை பிடித்திருந்தது அதனால் தான் இந்தப்படம் செய்தேன். அவருக்காக தான் இந்தப்படம் செய்தேன்.
இன்று 4 படங்கள் செய்கிறேன், எனக்கு நம்பிக்கை தந்த மனுவுக்கு நன்றி. நிறைய பேர் படம் பார்த்துவிட்டார்கள், தனுஷ் படம் பார்த்து விட்டார், ராட்சசன் படத்தை தாண்டி இந்தப்படத்தில் ஒரு நடிகராக மிரட்டி விட்டீர்கள் என்று பாராட்டினார், ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அதற்காக அவருக்கு நன்றி. லாக்டவுன் நிறைய டைம் தந்தது, அதனால் எல்லோரும் மீண்டும் மீண்டும் உழைத்து அழகாக இந்தப்படத்தை உருவாக்கியுள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!