
சைபர் செக்யூரிட்டி எக்ஸ்பர்ட் ஆக மாறிய ரஜிஷா விஜயன்
இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் உருவாகியுள்ள கீடம் என்கிற படத்தில் சைபர் செக்யூரிட்டி எக்ஸ்பர்ட்டாக நடித்துள்ளார் ரஜிஷா விஜயன். ஏற்கனவே கோகோ வீராங்கனையாக ரஜிஷா நடித்த கோக்கோ என்கிற படத்தை இயக்கிய ராகுல் ரிஜி நாயர் என்பவர் தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார்.
வழக்கமாக பொதுமக்கள் பலருக்கும் நேர்கின்ற, அதேசமயம் அவர்கள் அதிகம் கண்டுகொள்ளாத ஒரு விஷயத்தில் நிகழும் சைபர் குற்றங்கள் பற்றிய பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளது. இவற்றை ரஜிஷா விஜயன் தனது திறமையை பயன்படுத்தி எப்படி கையாளுகிறார் என்பதுதான் படத்தின் கதையாம். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!