
ஹிந்திக்கு செல்லும் விஜய் ஆண்டனி : சந்தோஷ் சிவன் இயக்கம்
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் படத்தை ஹிந்தியில் "மும்பைகர்" என்ற பெயரில் ரீமேக் செய்து, இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் விஜய் சேதுபதி இந்தியில் அறிமுகமாகிறார்.
இந்த நிலையில் அடுத்து சந்தோஷ் சிவன் தமிழ், ஹிந்தியில் தயாராகும் ஒரு படத்தை இயக்குகிறார். இதில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கிறார். இருமுகன், புலி படங்களை தயாரித்த ஷிபு தமீன்ஸ் தயாரிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் விஜய் ஆண்டனியும் ஹிந்திக்கு செல்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!