
காட்பாதர் படப்பிடிப்பில் நயன்தாரா
பல முயற்சிகளுக்குப் பின் இப்படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க சம்மதித்தனர். கடந்த வருடம் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார் நயன்தாரா. அதன்பிறகு சில பல காரணங்களால் படப்பிடிப்பு தாமதமானது. தற்போது மீண்டும் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகிறார்கள்.
சிரஞ்சீவி கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருப்பதால் அவர் சம்பந்தப்படாத மற்ற நடிகர், நடிகைகளின் காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள். தற்போது ஐதராபாத்தில் நடக்கும் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்டு நடித்து வருகிறார். படப்பிடிப்பில் கலந்து கொண்டு பின் ஹோட்டலுக்குத் திரும்பிய நயன்தாராவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளன. தன்னைப் புகைப்படம் எடுப்பதைக் கொஞ்சம் கோபத்துடன் நயன்தாரா பார்க்கும் வீடியோவும் வெளிவந்துள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!