
சூப்பர் ஹீரோவான கிரிக்கெட் வீரர் தோனி
இந்நாவல் குறித்த தோனி கூறியதாவது: இந்த பிரம்மாண்டமான புதிய முயற்சியில் நானும் இணைந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், இது உண்மையிலேயே ஒரு அற்புதமான முயற்சியாகும். அதர்வா - தி ஆரிஜின் ஒரு ஈர்க்கும் கதையும் மற்றும் அதி அற்புதமான கலைத்தன்மையும் கொண்ட வசீகரிக்கும் கிராபிக் நாவல்.
எழுத்தாளர் ரமேஷ் தமிழ்மணியின் தொலைநோக்குப் பார்வையில் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன், சமகாலத்திய தொடர்புடன் இந்தியாவின் முதல் புராண சூப்பர் ஹீரோவை அறிமுகப்படுத்தும் அவரது ஐடியாவை கேட்டவுடனே, சம்மதித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நாவலின் வெற்றியை தொடர்ந்து இதைப்படமாக எடுக்கும் முயற்சியும் உருவாகலாம் என தெரிகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!