
வலிமை பின்னணி இசை யார்? - நீடிக்கும் சஸ்பென்ஸ்…
யுவனின் சில பின்னணி இசை அமைப்புகள், இயக்குனர் வினோத்துக்குப் பிடிக்கவில்லை என்றும், அதனால் படத்தின் பின்னணி இசையிலிருந்து யுவன் விலகிவிட்டார் என்றும் தகவல் வெளியானது. அவருக்குப் பதிலாக ஜிப்ரான் பின்னணி இசையமைத்துள்ளார் என்றும் சொன்னார்கள்.
ஆனால், இன்று படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர் போனிகபூர் அவரது சமூகவலைதள பதிவில் யுவன்ஷங்கர் ராஜாவின் பெயரைத்தான் "டேக்" செய்துள்ளார். ஜிப்ரான் பெயரை "டேக்" செய்யவில்லை.
இதனால் படத்திற்கு யுவன் தான் பின்னணி இசையையும் அமைத்திருக்கிறார் என்று தெரிய வருகிறது. ஒரு வேளை யுவன் பின்னணி இசை இல்லை என்ற தகவல் வெளியானால் அது படத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற தயக்கத்தில் சொல்லாமலும் இருக்கலாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!