
மலையாளம் தவிர 4 மொழிகளில் வலிமை ரிலீஸ்
தற்போது பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பெரிய படங்களின் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாக ஆரம்பித்தன. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த "வலிமை" படமும் பிப்ரவரி 24ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. கடந்த சில தினங்களாகவே சமூக வலைத்தளங்களில் இந்தத் தேதியில்தான் படம் வெளியாகும் என தகவல் பரவி இருந்தது.
"வலிமை" படத்தை முதலில், தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில்தான் வெளியிடுவதாக இருந்தார்கள். ஆனால், இன்று வெளியான போஸ்டரில் கூடுதலாக தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளையும் சேர்த்துள்ளார்கள். ஆனால், மலையாளத்தில் படத்தை வெளியிடவில்லை. அஜித் நடித்த ஒரு தமிழ்ப் படம் முதல் முறையாக 4 மொழிகளில் வெளியாவது இதுவே முதல் முறை.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!