
மீ்ண்டும் நடிக்கிறார் இஷாரா நாயர்
ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். பி.ஈ பார் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். காவல் துறை உங்கள் நண்பன் படத்தில் நடித்த சுரேஷ் ரவி ஹீரோ. மற்றும் தம்பி ராமையா, லிவிங்ஸ்டன், கல்லூரி வினோத், மது, ரேணுகா உள்பட பலர் நடிக்கிறார்கள். காவல்துறை உங்கள் நண்பன் படத்தை இயக்கிய ஆர்டிஎம் இயக்குகிறார். பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கள் அரியரை கிளியர் செய்ய படும்பாடுகளை பற்றிய காமெடி படம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!