
தீ தீ தளபதி: கனடா விஜய் ரசிகர்களின் வெளியிட்ட ஆல்பம்
தீ தீ தளபதி என தொடங்கும் பாடலின் பாடல் வரிகளை கனடா விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் கார்த்திக் எழுதி, ஜனனியுடன் பாடி உள்ளார். கனடாவின் டொரோண்டாவில் உள்ள எக்ஸோடஸ் ஸ்டூடியோவில் இதனை உருவாக்கி உள்ளனர். யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
"இந்த பாடல், நிச்சயம் அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்தமானதாகவும் உற்சாகமானதாகவும் இருக்கும். அனைத்து நாடுகளிலுள்ள அவரின் ரசிகர்களிடையேயும் இந்த பாடல் ஒரு புத்துணர்வையும்,பரவசத்தையும் ஏற்படுத்தும். அஜித் படங்களுக்குதான் பரத்வாஜ் அதிக அளவில் இசை அமைத்துள்ளார். விஜய் படங்களுக்கு அவர் இசை அமைத்தில்லை. அதனால் அவரை இசை அமைக்க கேட்டுக் கொண்டோம். அவரும் மகிழ்ச்சியோடு இசை அமைத்துக் கொடுத்தார்" என்கிறார் கனடா விஜய் ரசிகர் மன்ற துணை செயலாளர் பாலாஜி பெருமாள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!