
மீண்டும் இணையும் சிம்பு - எஸ்ஜே சூர்யா
மலையாளத்தில் 2019ம் ஆண்டு வெளிவந்து சூப்பர்ஹிட்டான டிரைவிங் லைசன்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கில் இருவரும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. பிரித்விராஜ் மற்றும் சூரஜ் நடிப்பில் வெளியான இப்படத்தை லால் இயக்கியிருந்தார். இதைத்தொடர்ந்து இப்படத்தை தமிழில் வாலு, ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கவுள்ளார். பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் சிம்புவும், சூரஜ் கதாபாத்திரத்தில் எஸ்ஜே சூர்யாவும் நடிக்க உள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!