
அடுத்தடுத்து வலிமையாக வரும் புதிய வெளியீடுகள்
பொங்கலுக்கு வெளிவர வேண்டிய அஜித் நடித்துள்ள "வலிமை", மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்தின் முதல் முக்கிய வெளியீடாய் விஷால், டிம்பிள் ஹயாதி நடித்துள்ள "வீரமே வாகை சூடும்" பிப்ரவரி 4ம் தேதி வெளியாக உள்ளது. சூர்யா, பிரியங்கா மோகன் நடித்துள்ள "எதற்கும் துணிந்தவன்" பிப்ரவரி 15க்குப் பிறகு வெளியாகலாம். சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடித்துள்ள "டான்" படம் "வலிமை" வெளிவந்த இரண்டு, மூன்று வாரங்களுக்குப் பிறகு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலே குறிப்பிட்ட படங்களின் வெளியீட்டுத் தேதிகள் பற்றி உறுதியாகத் தெரிந்த பின்தான் மற்ற தமிழ்ப் படங்களின் வெளியீட்டுத் தேதிகளைப் பற்றி முடிவு செய்வார்கள் என்கிறது கோலிவுட் வட்டாரம். மார்ச் மாதம் முதல் வாரத்திற்கு நான்கைந்து படங்களுக்கு மேல் வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!