
மகளைத் தொடர்ந்து மகனையும் சினிமாவில் களமிறக்கும் இயக்குனர் ஷங்கர்
ஜன 26, 2022
Advertisement
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் தற்போது ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் ஷங்கரின் முதல் மகளுக்கு கடந்த ஆண்டு திருமணம் முடிந்துவிட்ட நிலையில், இரண்டாவது மகளான அதிதி ஷங்கர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து தற்போது ஷங்கரின் மகன் அர்ஜித்தும் சினிமாவில் ஹீரோவாக களமிறங்க உள்ளார். ஏற்கனவே சினிமாவில் நடிகராக வேண்டும் என்று வந்த டைரக்டர் ஷங்கர் பின்னர் இயக்குனர் ஆகிவிட்டார். அதனால் நடிகராக வேண்டும் என்ற தனது கனவை தனது மகன் அர்ஜித் மூலமாக நனவாக்கிக் கொள்ளும் முயற்சியில் அவர் இறங்கியுள்ளார்.
Tags
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!