
ஷங்கர் - ராம்சரன் படம் 2023 சங்கராந்திக்கு வெளியீடு
அரசியல் கலந்த திரில்லர் கதையில் உருவாகிவரும் இந்த படம் ரூ. 170 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை ரூபாய் 200 கோடிக்கு ஜீ நெட்வொர்க் நிறுவனம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும், ஷங்கர் ராம் சரண் இணைந்துள்ள இந்தப் படத்தை 2023ம் ஆண்டு சங்கராந்திக்கு வெளியிடுவதற்கு தயாரிப்பாளர் தில் ராஜு திட்டமிட்டிருப்பதாக தற்போது புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அப்படி என்றால் அடுத்தாண்டு பொங்கலுக்கு இப்படம் திரைக்கு வருகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!