
ஹாலிவுட் தரத்தில் தயாராகி வரும் சிவகார்த்திகேயனின் அயலான்
இந்நிலையில் இந்த படத்தின் எடிட்டர் ரூபன் ஒரு பேட்டியில் கூறுகையில், அயலான் படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும். குறிப்பாக ஏலியன்கள் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் அளவுக்கு பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஏகப்பட்ட வேலைகள் உள்ளது. அதனால் தான் படம் வெளியாவதில் தாமதம் ஆகி வருகிறது. அந்த வகையில் குழந்தைகளை வெகுவாகக் கவரக்கூடிய இந்த படம் திரைக்கு வரும்போது சிவகார்த்திகேயனை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும். அந்த அளவுக்கு அவரது கேரியரில் இந்தப் படம் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று எடிட்டர் ரூபன் தெரிவித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!