
புஷ்பா படத்திற்குப் பிறகு உயர்ந்த அல்லு அர்ஜூன் சம்பளம்?
"புஷ்பா" படத்தின் வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜூனும் பான்-இந்தியா ஸ்டார் ஆக உயர்ந்துவிட்டார். அப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வியாபாரம் முதல் பாகத்தை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தற்போது படத்தின் பட்ஜெட்டை அதிகரித்துள்ளார்களாம்.
இந்நிலையில் "புஷ்பா 2" படத்திற்குப் பிறகு தமிழ்த் திரைப்பட நிறுவனமான லைக்கா நிறுவனம் அல்லு அர்ஜூனை தங்களது தயாரிப்பில் நடிக்க வைக்க 100 கோடி ரூபாய் சம்பளம் பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பான்-இந்தியா படமாக உருவாக இருக்கும் அப்படம் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகலாம் என்கிறார்கள்.
லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் தமிழில் நடிக்க வேண்டிய ஒரு படத்தை பிரம்மாண்டமாக ஆரம்பித்து அப்படியே நிறுத்திவிட்டார்கள். அந்தப் படம் போல ஆகாமல் இருந்தால் சரி.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!