
வலிமை ரிலீஸ் எப்போது - அஜித் ரசிகர்கள் ஆர்வம்
தெலுங்கில் தயாராகி பான்-இந்தியா படமாக வெளிவர உள்ள "ஆர்ஆர்ஆர்" படமும் ஜனவரி 7ம் தேதியே வந்திருக்க வேண்டிய படம். அவ்வளவு பெரிய படத்தின் வெளியீடு பற்றி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.
அதனால், "வலிமை" படத்தின் வெளியீடு பற்றியும் சீக்கிரமே அறிவிப்பு வரும் என அஜித் ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். "ஆர்ஆர்ஆர்" படத்துடன் "வலிமை" ஒரே தேதியில் வெளியாக வாய்ப்பில்லை. இருந்தாலும், அந்தப் படத்திற்கு முன்பாக வருமா, பின்னர் வருமா என்பதுதான் கேள்வியாக உள்ளது.
கொரோனா அலை குறைந்து மக்களை மீண்டும் தியேட்டர்களுக்கு வரவழைப்பதை "வலிமை, ஆர்ஆர்ஆர், ராதேஷ்யாம், பீஸ்ட்" போன்ற பெரிய படங்கள்தான் செய்தாக வேண்டும். எனவே, குறித்த இடைவெளியில் இந்தப் படங்கள் வெளியாகும் வாய்ப்புகள்தான் அதிகம்.
"ஆர்ஆர்ஆர்" படம் வெளியீடு அவர்கள் அறிவித்துள்ள இரண்டு தேதிகளில் எந்த ஒரு தேதியில் வெளியாகும் என்பது உறுதியாகத் தெரிந்துவிட்டால் "வலிமை" படத்தின் அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!