தமிழ், மலையாளத்தில் உருவாகும் சிட்தி
ஜன 22, 2022
Advertisement
சூர்யா பிலிம் புரொடக்ஷன்ஸ் சார்பாக மகேஷ்வரன் நந்தகோபால் தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாரித்துள்ள படம் "சிட்தி". அஜி ஜான் கதாநாயகனாக நடித்துள்ளார். அக்ஷயா உதயகுமார் மற்றும் ஹரிதா கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். இவர்கள் தவிர விஜயன், ராஜேஷ் சர்மா, ஹரி கிருஷ்ணன், சிஜீ லால், வேணு மரியாபுரம், சொப்னா பிள்ளை, மதுவிருத்தி, திவ்யா கோபிநாத், தனுஜா கார்த்தி ஆகியோர் நடித்துள்ளார்கள்.
பயஸ் ராஜ் இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது: இது சற்றே வித்தியசமான கிரைம் திரில்லர் ஜானர். சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவன் சிட்தி தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கொலையாளியாக மாறுகிறார். அவர் ஏன் கொலையாளியாக மாறினார் ? இறுதியில் என்ன நடந்தது ? என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியுள்ளோம்.
இதன் படப்பிடிப்பு முழுவதும் கேரளாவின் எர்ணாகுளம், கொச்சி, திருவனந்தபுரம் போன்ற இடங்களில் 35 நாட்கள் இரவு பகலாக ஒரே கட்டமாக நடைபெற்றது. படத்தின் எல்லா பணிகளும் தற்போது முடியும் நிலையில் இருக்கின்றது. தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே சமயத்தில் வெளியிடவுள்ளோம். என்றார்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!