
புது வீட்டில் குடி புகுந்த பூஜா ஹெக்டே
அது குறித்து தன்னுடைய சமூகவலைதளத்தில், “ஒரு வருடமாகக் காத்திருந்த இன்றைய நன்னாள், அனைத்து கனவுகளும் நிறைவேறியது. உங்கள் மீது நம்பிக்கை வைத்து கடினமாக உழைக்கவும். இந்த பிரபஞ்சம், பிடிவாதமான மனதின் மீது காதலில் விழுகிறது,” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
கடந்த வருடம் மும்பை பாந்த்ரா பகுதியில் கடலைப் பார்த்தபடி இருக்கும் 3 படுக்கையறை கொண்ட அபார்ட்மென்ட் ஒன்றை வாங்கினார். படங்களில் நடித்து அவர் வாங்கிய சம்பளத்தைக் கொண்டு வாங்கியதால் அந்த அபார்ட்மென்ட்டின் இன்டீரியரை அவரே முன்னின்று செய்துள்ளார்.
தென்னிந்திய நடிகைகள் பலரும் தற்போது ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார்கள். பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா அதில் முன்னணியில் இருக்கிறார்கள். சமந்தா, அமலா பால் ஆகியோர் ஹிந்தி வெப் தொடர்களில் நடித்துள்ளார்கள்.
பிரபாஸுடன் பூஜா நடித்துள்ள "ராதேஷ்யாம்" பான் இந்தியா படமாக வெளிவர உள்ளது. விஜய்யுடன் பூஜா நடித்துள்ள "பீஸ்ட்", சிரஞ்சீவியுடன் தெலுங்கில் நடித்துள்ள "ஆச்சார்யா" ஆகிய படங்கள் வெளிவந்தால் பூஜா மூன்று மொழிகளிலும் மேலும் முன்னணி இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!