
கீர்த்தி சுரேஷின் குட் லக் சகி தமிழில் வருமா ?
2020 சுதந்திர தினத்தன்று இப்படத்தின் டீசர் தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிவந்தது. தெலுங்கில் 13 மில்லியன், தமிழில் 4 மில்லியன், மலையாளத்தில் 1 மில்லியன் பார்வைகளைப் பெற்றது.
சாதாரண கிராமத்துப் பெண், இந்திய துப்பாக்கி சுடும் அணியில் இடம் பெற்று தன்னுடைய திறமையை நிரூபித்து, "பேட் லக்" சகி ஆக இருப்பவர் எப்படி "குட் லக் சகி" ஆக மாறுகிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.
இப்படத்தை கடந்த வருட மத்தியில் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், கொரோனா பரவல் காரணமாக பல தேதிகளில் இப்படத்தின் வெளியீட்டை அறிவித்து, அறிவித்து தள்ளி வைத்தார்கள்.
தற்போது ஜனவரி 28ம் தேதி இப்படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள். ஆனால், தெலுங்கில் மட்டுமே வெளியாகிறதா அல்லது தமிழ், மலையாளத்திலும் வெளியாகிறதா என்பது பற்றிய சரியான அறிவிப்பு இல்லை.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!