
சந்தானத்தின் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் டீசர் நாளை வெளியாகிறது!
சந்தானம் துப்பறியும் நிபுணராக நடிக்கும் இந்தப் படம் நகைச்சுவை கலந்த திரில்லர் கதையில் உருவாகி வருகிறது. இப்படத்தில் சந்தானத்துடன் ஊர்வசி, குக் வித் கோமாளி புகழ், முனீஸ்காந்த் உட்பட பலர் நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தை வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிய மனோஜ் பீத்தா இயக்கி வருகிறார். இப்படத்தின் டீசர் ஜனவரி 21ம் தேதியான நாளை காலை 10:15க்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!