
ஷங்கர் - ராம்சரண் படத்தின் டிஜிட்டல் உரிமை ரூ.200 கோடி?
சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படத்தைத் தயாரித்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் தியேட்டர் உரிமை அல்லாத டிஜிட்டல் உரிமை மட்டும் 200 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக டோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் நடித்துள்ள "ஆர்ஆர்ஆர்" படம் வெளிவந்த பின் ராம்சரண் பான்-இந்தியா ஸ்டார் ஆக உயரும் வாய்ப்புகள் அதிகம். அவருடைய அடுத்த படத்தின் இயக்குனர் ஷங்கர் என்பதால் அந்தப் படமும் பிரம்மாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஜீ 5 ஓடிடி நிறுவனம் சார்பில் டிஜிட்டல் உரிமை 200 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.
ஷங்கர், ரஜினிகாந்த் இணைந்த "2.0" படத்தின் டிஜிட்டல் உரிமையை ஜீ 5 நிறுவனம் 110 கோடி கொடுத்து வாங்கியிருந்தது. ஷங்கரின் அடுத்த படத்தின் டிஜிட்டல் உரிமை சுமார் இரண்டு மடங்கு அதிகமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!