
கமல் பாடலுக்கு நடனம் அமைத்த கதக் நடன கலைஞர் பிர்ஜூ மஹாராஜ் காலமானார்
பண்டிட் பிர்ஜூ மஹாராஜின் கலை சேவையை பாராட்டி, இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருதினை கடந்த 1986ல் வழங்கி இந்திய அரசு கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் ட்ரம்ஸ், தபாலா உள்ளிட்ட வாத்திய கருவியையும் வாசிக்கக் கூடியவர். தும்ரி, தாத்ரா, பஜன், கஸல் போன்ற வடிவிலான பாடல்களை மிகச் சிறந்த முறையில் நேர்த்தியாகப் பாடக்கூடியவர்.
நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்றுள்ள கதக் பாடலான "உன்னை காணாத" பாடலுக்கு நடன வடிவமைப்பு செய்தவர். அந்த படத்திற்காக தேசிய விருது பெற்றவர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!