
கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், ஆச்சரியத்தில் திரையுலகம்
அடுத்து இந்நிறுவனம் சோனி பிக்சர்ஸ் உடன் இணைந்து, சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தைத் தயாரிக்க உள்ளது. இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். 2017ல் கௌதம் கார்த்திக் நடித்து வெளிவந்த "ரங்கூன்" படத்தை இயக்கியவர் இவர்.
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் தனது திறமையால் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தவர் சிவகார்த்திகேயன். தற்போது "அயலான், டான்" படங்களில் நடித்து முடித்துள்ளார். அடுத்து தமிழ், தெலுங்கில் தயாராக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். சிவகார்த்திகேயனின் 20வது படமான, அப்படம் பற்றிய அறிவிப்பு சமீபத்தில்தான் வெளியானது. கமல்ஹாசன் தயாரிக்க உள்ள புதிய படம் சிவகார்த்திகேயனின் 21வது படம்.
தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தில் மற்ற ஹீரோக்களை வைத்து எப்போதாவது ஒரு முறைதான் கமல்ஹாசன் படங்களைத் தயாரிப்பார். இதற்கு முன்பு 1987ல் "கடமை கண்ணியம் கட்டுப்பாடு" படத்தில் சத்யராஜ், 2003ல் "நளதமயந்தி" படத்தில் மாதவன், 2019ல் "கடாரம் கொண்டான்" படத்தில் விக்ரம் ஆகியோர் நடித்துள்ளனர். இப்போது அந்தப் பட்டியலில் சிவகார்த்திகேயனும் இணைந்திருப்பதை தமிழ்த் திரையுலகம் ஆச்சரியமாகப் பார்க்கிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!