
100 மில்லியன் கிளப்பில் இணைந்த டம் டம்
விஷால் நடித்த பாடல் ஒன்று 100 மில்லியன் பார்வைகளைப் பெறுவது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு அவர் நடித்த பல படங்களின் பாடல்கள் ஹிட்டானாலும் அதில் ஒரு பாடல் கூட யூடியூப்பில் 100 மில்லியன் பார்வைகளைத் தொட்டதில்லை.
கடந்த வருடம் வெளிவந்த படங்களில் "மாஸ்டர்" படத்தின் "வாத்தி கம்மிங்", "ஈஸ்வரன்" படத்தின் "மாங்கல்யம்..", "டாக்டர்" படத்தின் "செல்லம்மா" ஆகிய பாடல்கள் மட்டுமே 100 மில்லியன் கிளப்பில் இருந்தவை. இப்போது "எனிமி" படத்தின் "டம் டம்" பாடலும் அதில் இணைந்துவிட்டது. தமனுக்கு "மாங்கல்யம், டம் டம்" என இரண்டு 100 மில்லியன் பாடல்கள் அமைந்துவிட்டது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!