
நம்பர் 1 டிரென்டிங்கில் ஓ சொல்றியா… வீடியோ
இந்தப் பாடலின் லிரிக் வீடியோ படம் வெளியாவதற்கு முன்பே யூடியூப் தளத்தில் வெளியாகி பெரிய ஹிட் ஆனது. அந்த வீடியோவிற்கு மட்டும் தமிழில் இதுவரை 50 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகள் கிடைத்துள்ளது.
இப்பாடலின் முழு வீடியோ கடந்த வாரம் 7ம் தேதி வெளியானது. வெளியான நான்கு நாட்களிலேயே 1 கோடி பார்வைகளைக் கடந்து தொடர்ந்து டிரென்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. தெலுங்குப் பாடல் நான்கு நாட்களில் 3 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.
தெலுங்கு, தமிழில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருக்கும் சமந்தா, முதலில் இப்பாடலில் நடிக்கத் தயங்கினார். அவரை படத்தின் கதாநாயகன் அல்லு அர்ஜுன் தான் வற்புறுத்தி நடிக்க வைத்துள்ளார். இப்போது இந்த ஒரு பாடலால் ரசிகர்களிடம் சமந்தாவுக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!