
வில் ஸ்மித்துக்கு கோல்டன் குளோப் விருது
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோல்டன் விருது விழா களையிழந்து விட்டது. இந்த ஆண்டுக்கான கோல்டன் விருது விழா சத்தமின்றி நடந்து முடிந்து விட்டது. முக்கியமான நிர்வாகிகள் மட்டும் நேரில் கலந்து கொள்ள ஆன்லைனின் வாக்கெடுப்பு நடத்தி விருது பட்டியலை அறிவித்து விட்டார்கள்.
இதில் கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்த வில் ஸ்மித் சிறந்த நடிகராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். பீயிங் தி ரிக்கோர்டஸ் படத்தில் நடித்த நிக்கோல் கிட்மேன் சிறந்த நடிகையாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். பெண் இயக்குனர் ஜேன் கேம்பியன் சிறந்த இயக்குனராகவும், அவர் இயக்கிய தி பவர் ஆப் டாக் சிறந்த படமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய வெஸ்ட் சைட் ஸ்டோரி படம் சிறந்த காமெடி படமாக தேர்வு பெற்றுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!