
ஹிந்தி வேதா பற்றி தமிழ் விக்ரம் அடித்த கமெண்ட்
தமிழ் சினிமாவில் வந்த படங்களில் ஒரு கிளாசிக் படமாக இந்தப் படம் பெயர் பெற்றது. இப்படத்தைத் தற்போது ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன், சைப்அலிகான் மற்றும் பலர் நடிக்க புஷ்கர் - காயத்ரி இயக்கி வருகிறார்கள். தமிழில் மாதவன் நடித்த "விக்ரம்" கதாபாத்திரத்தில் ஹிந்தியில் சைப்அலிகானும், விஜய் சேதுபதி நடித்த "வேதா" கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷனும் நடிக்கிறார்கள்.
இன்று ஹிருத்திக் ரோஷன் பிறந்தநாளை முன்னிட்டு "வேதா" கதாபாத்திர போஸ்டர் வெளியிடப்பட்டது. போஸ்டருக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. அது பற்றி தமிழில் "விக்ரம்" ஆக நடித்த மாதவன், “இப்போது நான் பார்க்க விரும்பும் "வேதா".....வாவ்.. ப்ரோ… இது ஒரு காவியம்” என கமெண்ட் கொடுத்து பாராட்டியுள்ளார்.
தங்கள் நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து, “உங்களுடன் பணி புரிவது பிரமிக்க வைக்கிறது. சிறந்த வருடமாக அமைய வாழ்த்துகள். 2022ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாகும்,” என இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!