
பொங்கலுக்கு வெளியாகும் சதீஷின் நாய் சேகர்
மேலும் கொரோனா தொற்று காரணமாக தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் அஜித்தின் வலிமை, ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம் உள்ளிட்ட பல படங்களின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீரமே வாகை சூடும், கொம்பு வச்ச சிங்கம்டா, நாய் சேகர் உள்ளிட்ட பல படங்கள் பொங்கலுக்கு வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு இந்த நாய் சேகர் படத்தில் நாயின் குணங்கள் மனிதனுக்கும் மனிதனின் குணங்கள் நாய்க்கும் செல்வதால் என்னென்ன விபரீதங்கள் நிகழ்கிறது என்பதை படமாக்கி இருப்பதால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனும் ஒரு பாடல் எழுதி இருக்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!