
ஓடிடி-யில் 4 மொழிகளில் இருக்கும் மாநாடு
இதனிடையே, "மாநாடு" படம் கடந்த மாதம் டிசம்பர் 24ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது. தமிழில் மட்டும் தான் ஓடிடியில் வெளியானது என்று பார்த்தால் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளையும் பின்னர் சேர்த்திருக்கிறார்கள். இப்படி நான்கு மொழிகளில் படம் வெளியாகியிருப்பது பரபரப்பாக பேசப்படவே இல்லை. இப்போது தென்னிந்திய மொழி ரசிகர்கள் அனைவரும் ஓடிடி தளத்தில் அவரவர் மொழிகளில் படத்தை ரசிக்கலாம். நான்கு மொழிகளிலும் "மாநாடு" என்றே படத்தின் தலைப்பு இருக்கிறது.
அப்படியென்றால் தெலுங்கில் "தி லூப்" என்ற பெயரில் படத்தை வெளியிடுவதாகச் சொன்னது நின்று போனதாகத்தான் அர்த்தம். மேலும், படத்தின் ரீமேக்கையும் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபு வாங்கியுள்ளதாக அறிவித்திருந்தார். தெலுங்கில் ஓடிடியில் வெளிவந்து விட்ட பிறகு வேறு ஒரு நடிகரை வைத்து அதே படத்தை எப்படி தெலுங்கில் நேரடியாகத் தயாரித்து வெளியிட முடியும். அப்படியே தயாரித்து வெளியிட்டாலும் ஓடிடியில் படம் பார்த்தவர்கள் மீண்டும் படம் பார்க்க வருவார்களா என்ற கேள்வியும் எழுகிறது.
"மாநாடு" படம் பற்றிய தகவல்கள், படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ஏதோ ஒரு குழப்பத்துடனேயே இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!