
மது விளம்பரத்தில் நிதி அகர்வால் : வலுக்கும் எதிர்ப்பு
இந்நிலையில், அவர் நடித்த மதுபான விளம்பரம் ஒன்று வெளியானது. அதில், ஒரு கோப்பையில் மதுவை ஊற்றி அவர் நுகர்ந்து பார்க்கும் காட்சியும் அந்த மதுபானம் சுவைக்கவும் பருகவும் சிறந்தது என்று பேசும் காட்சியும் இடம்பெற்றுள்ளன. இது இந்தியாவின் மிகச்சிறந்த மது வகை என்று பாராட்டுச் சான்றிதழும் வழங்குகிறார்.
இந்த விளம்பரம் இளைஞர்களை மது அருந்த தூண்டுவதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ரசிகர்களும், சமூக வலைத்தளத்தில் அவரை பின்பற்றுகிறவர்களும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே ஆகியோரும் ஏற்கெனவே மது விளம்பரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!