
வலிமை ரிலீஸில் மாற்றமில்லை - 50 சதவீதம் அனுமதியிலேயே களமிறக்கம்
தற்போது ஒமிக்ரான் வடிவில் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருவதால் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் தியேட்டர்களில் 50 சதவீதம் இருக்கைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் வலிமை படம் தள்ளிப்போகுமா அல்லது 50 தியேட்டர்களிலேயே ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் ஜன., 13ம் தேதி படத்தை வெளியிடுவதில் உறுதியாக உள்ளார். இதுதொடர்பாக புரொமோவை ஒன்றை வெளியிட்டு ‛வலிமை" படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் ஜன., 13ல் தியேட்டர்களில் ரிலீஸாகும் என தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர் படமும் இதே மாதிரி ஒரு இக்கட்டான சூழ்நிலையை சந்தித்தது. இருப்பினும் 50 சதவீதம் இருக்கைககளில் தைரியமாக படத்தை களமிறக்கி வசூலை அள்ளினர். அதேப்போன்று அஜித்தின் வலிமை படமும் வெற்றி பெறுமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!