
கோவாவில் புத்தாண்டு கொண்டாடிய விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா
இத்தனைக்கும் இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் கூட எதுவும் வெளியாகவில்லை. ஆனால் விஷயம் வெளியே தெரிய வந்தது வேறு ஒரு ரூபத்தில்.. புத்தாண்டு தினத்தன்று அதை வரவேற்கும் விதமாக ராஷ்மிகா தனது புகைப்படம் ஒன்றை சோஷியல் மீடியாவில் ஒன்றை வெளியிட்டார். அதே தினத்தில் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டாவும் தனது சோஷியல் மீடியாவில் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து கூறியிருந்தார்.
இந்த இரண்டு புகைப்படங்களும் ஒரே இடத்தில் ஒரே பின்னணியில் தான் எடுக்கப்பட்டுள்ளன. தவிர இந்த இரண்டு பேரின் புகைப்படங்களை பார்த்துவிட்டு இவற்றை எடுத்தது கூட விஜய் தேவரகொண்டாவாக இருக்கலாம் என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!