
50 சதவீதத்தை அமல்படுத்திய தியேட்டர்கள் : வலிமை வருமா?
ஆனாலும், இணைய முன்பதிவு தளங்களில் பார்க்கும் போது இன்னும் சில தியேட்டர்களில் 100 சதவீத இருக்கை அனுமதிக்கான வரைபடம் மட்டுமே காட்டப்படுகிறது. அதே சமயம், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ஒரு இருக்கைக்கும் மற்றொரு இருக்கைக்கும் இடைவெளி விட்டுள்ள வரைபடம் இடம் பெற்றுள்ளது.
இன்னும் சில மாநிலங்களிலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக "ஆர்ஆர்ஆர், ராதேஷ்யாம்" உள்ளிட்ட படங்களின் வெளியீடு தள்ளி வைக்கப்படும் எனத் தெரிகிறது. அஜித் நடித்துள்ள "வலிமை" படத்தை ஜனவரி 13ம் தேதி வெளியிடுவதாக அறிவித்து போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்கள். கடந்த வருடம் விஜய் நடித்த "மாஸ்டர்" படம் 50 சதவீத இருக்கை அனுமதியில் தான் வெளிவந்து வசூலில் சாதனை படைத்தது. எனவே, "வலிமை" படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் இருக்காது என்றே சொல்கிறார்கள்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!