
முந்தைய சாதனைகளை முறியடிக்குமா வலிமை டிரைலர்
படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஜீ ஸ்டுடியோஸ், “பெரிதாக ஒன்று வரப் போகிறது, இந்த இடத்தைப் பாருங்கள், வலிமை மிகப் பெரிய அப்டேட்,” என முதலில் அறிவித்திருந்தது. சற்று முன்னர், ‛‛இனி அமைதி காக்க முடியாது,. காத்திருப்பு முடிந்தது. வலிமை டிரைலர் மாலை 6.30 மணிக்கு வெளியாகும்” என ஜீ ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் விஜய், அஜித் ஆகியோர் நடிக்கும் படங்களின் டீசர், டிரைலர் வெளியாகும் போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். இரண்டு ரசிகர்களும் ஒருவருக்கொருவர் சூடாக சண்டையிட்டுக் கொள்வார்கள்.
இதற்கு முன்பு வெளிவந்த விஜய் நடித்த "மாஸ்டர்" டீசர் வெளிவந்த போது புதிய சாதனைகள் சிலவற்றைப் படைத்தது. இப்போது அஜித் நடித்துள்ள "வலிமை" டிரைலர் வரப் போகிறது. இது முந்தைய விஜய் படங்களின் சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைக்கப் போகிறதா என்ற எதிர்பார்ப்பு அஜித் ரசிகர்களிடம் உள்ளது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!