
விஜய் பட பாடல் - செந்தில், ராஜலெட்சுமியின் ஆசை
தற்போது சினிமாவிலும் இருவரும் பல பாடல்களை பாடி வருகிறார்கள். இவர்கள் காம்போவில் சின்ன மச்சான் பாடல் சூப்பர் ஹிட் ஆனது. சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் ராஜலெட்சுமி பாடிய "ஹே சாமி" பாடல் இப்போதும் டிரெண்டிங்கில் உள்ளது. இந்நிலையில் இவர்கள் விஜய் 66-ல் பாடல் பாடியுள்ளதாக தகவல் வைரலாகி வருகிறது.
இது பற்றி செந்தில் சொல்லும் போது, நானும், என் மனைவியும் விஜய் 66 படத்தில பாட்டு பாடியிருக்கிறத வெளியாகுற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைஞ்சோம். இது வெறும் வதந்தி தான். அஜித் படத்துல பாடிட்டோம். விஜய் படத்திலையும் பாட ஆசையா தான் இருக்கு. ஆவலோடு காத்திட்டு இருக்கோம் என கூறியுள்ளார்.
செந்தில் கணேஷ் தற்போது இரண்டு முன்னணி தமிழ் கதாநாயகர்களுக்கு பாடல் பாடியுள்ளார். விரைவில் அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!