
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் மோதும் தமிழ் படங்கள்
இந்த நிலையில் இந்த ஆண்டு 19வது சர்வதேச திரைப்பட விழா வரும் டிசம்பர் 30 ம் தேதி துவங்கி, 2022 ம் ஆண்டு ஜனவரி 6 ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. காலை 9.30 மணி துவங்கி, இரவு 9.30 மணி வரை இந்த விழா நடைபெற உள்ளது.
சத்யம் சினிமாஸ் , பிவிஆர் , எஸ்டிசி அண்ணா சினிமாஸ் ஆகிய தியேட்டர்களில் இந்த திரைப்பட விழா நடக்கிறது. 60 நாடுகளை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட உள்ளன. தமிழில் சிறந்த படம், இரண்டாவதாக சிறந்த படம், ஸ்பெஷல் ஜுரி விருது ஆகியவற்றுக்கான போட்டிகள் தனியாக நடைபெற இருக்கிறது.
இந்த போட்டியில் ஐந்து உணர்வுகள், பூமிகா, கர்ணன், கட்டில், கயமை கடக்க, மாறா, ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், சேத்துமான், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், தேன், உடன்பிறப்பே படங்கள் ஆகியவை கலந்து கொள்கின்றன.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!