
ரூ.4500 கோடி வசூலித்த ஸ்பைடர்மேன் - நோ வே ஹோம்
இந்தியாவில் மட்டும் இப்படம் நான்கு நாட்களில் 140 கோடியை வசூலித்துள்ளது. உலக அளவில் "ஸ்பைடர்மேன் - நோ வே ஹோம்" படத்திற்கு அதிக வசூலைக் கொடுத்த நாடுகளில் இந்தியா 5வது இடத்தில் உள்ளதாம்.
இந்தியாவில் இதற்கு முன்பு வெளியான "ஸ்பைடர் மேன்" படங்களில் "ஸ்பைடர்மேன் - ஹோம் கம்மிங்" படம் 60 கோடி ரூபாயையும், "ஸ்பைடர்மேன் - பார் பிரம் ஹோம்" படம் 86 கோடி ரூபாயையும் முதல் நாள் நிகர வசூலாகப் பெற்றிருந்தது. "ஸ்பைடர்மேன் - நோ வே ஹோம்" படம் 109 கோடி ரூபாயை நிகர வசூலாகப் பெற்றிருக்கிறது.
சிறந்த ஆக்ஷன் ஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் எப்போதுமே நல்ல வரவேற்பும், வசூலும் உண்டு என்பதை இப்படம் மீண்டும் நிரூபித்துள்ளது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!