
100 மில்லியன் சாதனையைப் படைத்த ஓ சொல்றியா மாமா...
வெளியீட்டிற்கு முன்பு சர்ச்சையை ஏற்படுத்தியதும் இப்பாடலை அதிகம் பார்க்க வைத்துள்ளது. தெலுங்கில் இப்பாடல் 63 மில்லியன் பார்வைகளையும், தமிழில் 16 மில்லியன், ஹிந்தியில் 12 மில்லியன், கன்னடத்தில் 6 மில்லியன், மலையாளத்தில் 2 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது.
தமிழில் இப்பாடலை விவேகா எழுத நடிகை ஆண்ட்ரியா பாடியுள்ளார். இப்பாடல் இந்த அளவுக்கு வரவேற்பு பெற்றுள்ளது குறித்து சமந்தா, “நல்லவளாக நடித்திருக்கிறேன், கெட்டவளாக நடித்திருக்கிறேன், ஜாலியாக, சீரியசாக இருந்திருக்கிறேன், தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறேன். நான் எடுத்துக் கொள்வதை சிறப்பாகச் செய்ய கடினமாக உழைப்பேன். ஆனால், "செக்சி" ஆக நடிப்பதென்பது அடுத்த கட்ட கடின உழைப்பு. உங்கள் அன்புக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சமந்தாவின் இந்தப் பதிவுக்கு நடிகைகள் தமன்னா, மாளவிகா மோகனன், ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!