
கோமாளி இயக்குனரின் படத்தில் யுவன்ஷங்கர் ராஜா
இது பற்றிய அறிவிப்பை தன்னுடைய டுவிட்டரில், “பள்ளியில் படித்த போது, "பையா" படத்தின் பாடல்களை திரும்பத் திரும்பக் கேட்ட காலத்தில், லெஜன்ட் யுவனுடன் வேலை செய்வேன் என்று நினைத்துப் பார்த்தேனா?. வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் நடக்கும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதீப்பின் டுவீட்டை ரீ-டுவீட் செய்து யுவன், “இதற்காக மிக்க கிழ்ச்சி. இந்த அற்புதமான படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பது மகிழ்ச்சி,” என்று தெரிவித்துள்ளார்.
எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்க உள்ள இப்படத்தில் பிரதீப்பே நாயகனாக நடித்து, இயக்கவும் உள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!